வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

தமிழின் பெருமை சொல்லும் ஒலி நாடா


தமிழ் மொழி அறிந்தோர் சற்றைய நிமிடம் இவ்வொலி நாடாவினைக் கேளுங்களேன்.

தமிழ் மொழி அருமையை தரமான வகையிலே கணீர் குரலில் விளக்கும் பதிவு..

நன்றி : முக நூலில் பகிர்ந்த நண்பருக்கு.

புதன், 29 ஆகஸ்ட், 2012

அறிஞர்களின் பொன் மொழிகள் -1

ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது. - ஸாடி

மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை. - அக்னஸ் றெப்லையர்

புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. - பிலிப் குறொஸ்பி

உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது. - எலனொர் ரூஸ் வெல்ட்

ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான். - ஹென்றி சி. லிங்க்

எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும்.  
ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம். என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான்
என்ன செய்ய வேண்டும்?

இவை
ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும். - நதானியல் பிராண்டன்

வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல. - எட்வின் சி. ப்ளிஸ்

நன்றி: வலைப்பூ

உங்கள் பக்கத்தில் யார்? - அத்வைத் சதானந்த்

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. 

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.


நன்றி: நமது நம்பிக்கை

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நகைச்சுவைக் காணொளி- 3


ஒரு அருங்காட்சியகத்தில் நடக்கிற கூத்தைப் பாருங்களேன்..!

படித்த சில பொன்மொழிகள் - 14

  1. இரவு உணவைக் குறைத்தால் ஆயுள் நீடிக்கும்.
  2. அன்பளிப்பும், தண்டனையும் தான் இந்த உலகை ஆளுகின்றன.
  3. எண்ணெய் விட்டதற்கு ஏற்றபடி இயந்திரம் வேலை செய்யும்.
  4. வண்டி கனமாயிருந்தால் பாரம் தோன்றாது.
  5. பழைய சொற்கள் அறிவுக் களஞ்சியமாம்.
  6. தூக்கியெறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
  7. மிகப்பெரிய உதவியும் உதவியே! மிகச்சிறிய உதவியும் உதவியே!
  8. வேலையை மாற்றிச் செய்வது ஓய்வுக்குச் சமம்.
  9. தேன் இனிப்பாக இருந்த போதிலும், அதை முள்ளோடு நக்காதே.
  10. எளிமையைப் பின் தொடர்ந்து சந்தோஷம் வருகிறது.

புதன், 22 ஆகஸ்ட், 2012

நெஞ்சிற்கோர் தூது!


ஊர்க்குருவி பறந்திடு உண்மைதனை சொல்லிவர
பாரினில் காணொரு பச்சிளங் குணவதி
தேரெடுத்து வந்திட்டே தினைக்கதிரும் தந்திட்டே
ஆயொப்பர் நல்கிடவே ஆசைமணம் புரிவோமே
மார்பிலே தரித்தெடுத்த மாருதியை வென்றெடுத்து
நீரொழுகும் வைகையன்ன நித்தமுங் கூடிட
பரியாய் வருபொழுது பகர்வாய்
சிறகொடு அன்பொழு சிற்றினப் புள்ளினமே


படம்: rami-loveallsaveall.blogspot.com

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

மன்னவனைத் தேடிய நெஞ்சம்


நீர்வடித்த தடாகந்தனில் நெருஞ்சி பூத்திருக்க
ஆர்கலி சூழ்ந்தாங்கே அகிலமுந் தாழ்ந்திருக்க
வாரேன் நெஞ்சே வரிசை காணொற்ப
வாராமற் நின்றதோ வள்ளலின் பொற்றேர்!


படம்: loguvinvalaippoo.blogspot.com

படித்த சில பொன்மொழிகள் - 13


  1. பெண்களின் துரோகம் மண் கவ்வச் செய்யும்.
  2. நடுக்கடலில் கப்பல் மாலுமிக்கு தான் சொந்தம்.
  3. பறவைக்குப் பயந்து விதைக்காமல் இருக்காதே!
  4. அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரம் மாதிரி!
  5. செவ்வாயில் பொருள் வாங்கினால் செல்வம் பெருகும்.
  6. நிலா ஒருவன் தோட்டத்தில் மட்டும் காய்வதில்லை.
  7. வைத்தியனுக்குப் பணம் கொடு, இறைவனுக்குப் புகழ் பாடு.
  8. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவனுக்கு அறுவடை செய்கிறான்.
  9. உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
  10. போர்க்காலத்தில் வாளை இரவல் வாங்க முடியாது.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 12


  1. காவோலையப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்!
  2. பரணியிலே உதித்தவன் தரணியை ஆள்வான்.
  3. பணத்தை வைத்துப் பாசத்தை பிரித்து விடாதே!
  4. பணத்திற்கு அடிமையாகி பாவத்தை செய்து விடாதே
  5. பலர் முகர்ந்த ரோஜாவில் மணம் இருக்காது 
  6. பூவில்லாமல் கல்யாணமில்லை கண்ணீர் இல்லாமல் துக்கமில்லை.
  7. பிரியமில்லாத பெண்டிரை விட பேய் நல்லது
  8. பிள்ளை அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்
  9. பிச்சைக் காரன் எப்போதும் கடனாளி ஆவதில்லை
  10. புத்தி கெட்ட ராஜாவுக்கு மதிகெட்ட மந்திரி.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 11


  1. தரித்திரம் பட்டாலும் தைரியத்தைக் கை விடாதே!
  2. தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரையவேண்டும்.
  3. தாயும் பிள்ளை ஆனாலும் வாயும் வயிறும் வேறு தான்.
  4. தாடி பற்றி எரியறச்சே பீடிக்கு நெருப்பு கேட்டானாம்.
  5. தாய் முகம் காணாத பிள்ளையும், மழை முகம் காணாத பயிரும் ஒன்று.
  6. தூங்கின்ற புலியைத் தட்டி எழுப்ப முடியுமா?
  7. தேனை அழித்தவன் புறங்கையை நக்காமல் விடுவானா?
  8. நல்லருக்கும், தங்கத்திற்கும் சோதனை அதிகம்.
  9. நாய் இருக்கும் போது நாம் ஏன் குரைக்க வேண்டும்?
  10. பழுத்த இலையைக் கண்டு பச்சை இலை சிரித்தாற் போல

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 10


  1. சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும்.

  2. கைப்பொருள் அற்றவனை கட்டின பொண்டாட்டியும் மதிக்க மாட்டாள்.

  3. கூத்தாடி கீழே பார்ப்பான். கூலிக்காரன் மேலே பார்ப்பான்.

  4. வாழ்வதில் தான் இன்பம். உழைப்பதில் தான் வாழ்வு.

  5. இரவல் வாங்குவதினால் உனது அமைதி கெட்டு விடும்.

  6. நம்பிக்கை ஏழையின் உணவு.

  7. உன் எதிரி எறும்பாக இருந்தாலும் அவனை யானையாகக் கருது.

  8. தவறை ஒப்புக் கொள்ளுதல் தோல்வியல்ல; அந்த ஒப்புதலே வெற்றியாகும்.

  9. அறிவு மௌனத்தைக் கற்று தரும்.

  10. ஆவது அஞ்சிலே தெரியும்; போவது பிஞ்சிலே தெரியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...